Posts

Showing posts from November, 2018

மீளா துயரம் - ருத்ர தாண்டவம் ஆடிய கஜா

Image
      AUTHOR: ARUN RAVI                       'கஜா' இந்த ஒரு சொல் தான் தென் தமிழகத்தையே உழுக்கிப் போட்டுள்ளது. இந்து மற்றும் பௌத்த இதிகாசங்களில் 'கஜா' என்றால் 'வலிமை வாய்ந்த'   அல்லது 'மிக பெரிது' என்று பொருள். ஆங்கிலத்தில் கஜா என்றால் யானை என்று பொருள்.                கஜா புயல் இரண்டு நாள் ருத்ர தாண்டவத்தில் சுமார் 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு சுமார் 120 km வேகத்தில் வீசிய புயல் காற்று அது கடந்து சென்ற இடங்களில் அளவற்ற சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கடலூர் மற்றும் காரைக்கால்(புதுவை) ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.                               ...