மீளா துயரம் - ருத்ர தாண்டவம் ஆடிய கஜா

      AUTHOR: ARUN RAVI         


            'கஜா' இந்த ஒரு சொல் தான் தென் தமிழகத்தையே உழுக்கிப் போட்டுள்ளது. இந்து மற்றும் பௌத்த இதிகாசங்களில் 'கஜா' என்றால் 'வலிமை வாய்ந்த'  அல்லது 'மிக பெரிது' என்று பொருள். ஆங்கிலத்தில் கஜா என்றால் யானை என்று பொருள்.

               கஜா புயல் இரண்டு நாள் ருத்ர தாண்டவத்தில் சுமார் 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு சுமார் 120 km வேகத்தில் வீசிய புயல் காற்று அது கடந்து சென்ற இடங்களில் அளவற்ற சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கடலூர் மற்றும் காரைக்கால்(புதுவை) ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
                                           Image result for gaja cyclone
              இந்ந இயற்கை சீற்றத்தால் டெல்டா மாவட்டங்கள் தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளானது. இலட்சக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்ட பயிர்கள், தென்னை மரங்கள் வாழை மரங்கள் என அனைத்தும் ஆழிந்து போனது. இதில் மனதை உருக்கக் கூடியது வீட்டில் ஒன்றாக வளர்க்கப்பட்ட கால்நடைகள் மாண்டுபோனது தான். சுமாரக 700 மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.
              அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளின் படி
170,500 மரங்களும் 40,000 மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்துள்ளது.
              தமிழக அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருத்த உயிர் சேதம் தவிர்கப்பட்டுள்ளது.
             மனிதம் செத்த ஊரிலும் இன்னும் பல மனிதர்கள் வாழ தான் செய்கிறார்கள்.
                    Image result for gaja cyclone
   

         "கஜா புயலில் மடிந்த அனைவருக்கருக்கும் சமர்ப்பணம்"

Comments

Popular posts from this blog

One year of EPS Government

War of Waters