மண்ணில் புதைந்த மனிதம் : அன்று ஈழம் இன்று சிரியா

Author: Arun Ravi
                                                      


                ஒன்பது ஆண்டுகளுக்கு முன்(2009) ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அந்த கொடூர சம்பவத்தை இன்று நினைத்தாலும் கண்களில் நீர் ததும்பும்.ஒட்டுமொத்த ஈழமும் இரத்தத்தில் கழங்கிக்கிடந்தது. உலகம் அது வரைக் கண்டிடாத மிக பெரிய மனிதஇனபேரழிவு ஈழப் படுகொலை. இன வெறியின் காரணமாக அரசின் உதவியுடன் பல அகோரங்கள் அரங்கேரின.உலக நாடுகளுக்கு இந்த சம்பவங்கள் வெரும் வேடிக்கையே. சிரியாவில் 2011-ல் ஆசாத் அதிபர் பதவியிலிருந்து விலக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உள் நாட்டுப் போராக உருவெடுத்து நிற்கின்றது.சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் பதிவுகளின்படி 2011 ல் இருந்து இன்று வரை சுமார் 5 இலட்சம் பேர் கொள்ளப்பட்டுள்ளனர். சுமாராக 51 இலட்சம் பேர் அகதிகளாக வேறு நாடு களில் உள்ளார்கள்.கடந்த 8 நாட்களில் மட்டும் 500 மேற்பட்டோர் கொள்ளப்பட்டனர்.கொள்ளப்பட்டது தீவிரவாதிகளோ பிரிவினைவாதிகளோ இல்லை, அப்பாவி மக்கள். செத்து மடிந்தது அப்பாவிகள் மட்டுமல்ல மனிதநேயமும் தான்.

Comments

Popular posts from this blog

One year of EPS Government

மீளா துயரம் - ருத்ர தாண்டவம் ஆடிய கஜா

War of Waters